Site icon Tamil News

பிரித்தானியாவில் ஓய்வூதியம் பெறுவோர் பஸ் பாஸ்களையும் இழக்க நேரிடலாம்!

பிரித்தானியாவில் குளிர்கால எரிபொருள் கொடுப்பனவுகளைக் குறைக்கும் தொழிற்கட்சியின் நடவடிக்கையைத் தொடர்ந்து ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் பஸ் பாஸ்களை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த வார தொடக்கத்தில் மில்லியன்கணக்கான முதியோர்களுக்கான குளிர்கால எரிபொருள் கொடுப்பனவுகளை தொழிற்கட்சி நீக்கியதால், அரசு ஓய்வூதியம் பெறுவோர் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்த ஆண்டு, சுமார் 1.5 மில்லியன் தனிநபர்கள் மட்டுமே கட்டணத்தைப் பெறுவார்கள், ஏறத்தாழ 10 மில்லியன் ஓய்வூதியதாரர்கள் ஆண்டு நிதி உதவியின்றி £100 முதல் £300 வரை வெப்பச் செலவுகளுக்குச் செலவிடுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேசிய உரிமை அட்டை (NEC) இலவச பேருந்து பயணத்தை வழங்குகிறது. தற்போது இந்த பஸ் பாஸ்களையும் இழக்க நேரிடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

Exit mobile version