Site icon Tamil News

U19 WC – இறுதி போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளும் ஆஸ்திரேலியா

15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.

இந்த தொடரின் முதலாவது அரையிறுதி இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில் 2-வது அரையிறுதியில் பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா இன்று மோதி வருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் தொடக்க முதலே திணறியது.

இதனால் 79 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து அசான் அவாய்ஸ்- அராபத் மின்ஹாஸ் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். பொறுப்புடன் ஆடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர்.

இருவரும் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்களில் ஷாமில் ஹுசைன்(17) தவிர மற்ற வீரர்கள் இரட்டை இலக்க ரன்களை தாண்டவில்லை. இறுதியில் பாகிஸ்தான் அணி 48.5 ஓவரில் 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஆஸ்திரேலியா தரப்பில் டாம் ஸ்ட்ரேக்கர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹாரி டிக்சன்- சாம் கான்ஸ்டாஸ் களமிறங்கினர்.

களமிறங்கிய 14 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் 4, ஹர்ஜாஸ் சிங் 5, ரியான் ஹிக்ஸ் 0 ரன்களிலும் நடையை கட்டினார்.

இதனால் 59 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தடுமாறியது. இதனையடுத்து ஆலிவர் பீக்- ஹாரி டிக்சன் ஜோடி சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

சிறப்பாக ஆடிய ஹாரி டிக்சன் அரை சதம் விளாசி அவுட் ஆனார். ஆலிவர் பீக் 49 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர். இறுதியில் கைவசம் 1 விக்கெட் மீதி இருந்தது. 16 ரன்கள் தேவைப்பட்டது.

உச்சக்கட்ட பரப்பரப்பில் ஆஸ்திரேலியா 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

பாகிஸ்தான் தரப்பில் அலி ராசா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Exit mobile version