Site icon Tamil News

சீனாவை உலுக்கிய பெபின்கா சூறாவளி – ஸ்தம்பித்த போக்குவரத்து

சீனாவின் வர்த்தகத் தலைநகரான ஷாங்காயில் பெபின்கா சூறாவளி தாக்கியதால் ஸ்தம்பித்தது.

70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த சூறாவளி தாக்கியதால், தொடர்ந்து 6 மணி நேரத்துக்கு கனமழை பெய்தது.

மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய சூறை காற்றால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன.

சுமார் 4 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

நிலா திருவிழாவை முன்னிட்டு 3 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் சொந்த ஊர்களுக்கு செல்ல இருந்தோர் பாதிக்கப்பட்டனர்.

Exit mobile version