Site icon Tamil News

ஒரே தொலைபேசியில் இரு வட்ஸ்எப் கணக்குகள்! எப்படி பயன்படுத்துவது?

whatsapp நிறுவனம் தொடர்ச்சியாக பல புதிய அப்டேட்டுகளை வழங்கிக் கொண்டே வருகிறது.

பணம் செலுத்துதல், ஸ்கிரீன் ஷேரிங் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை ஒரே கைப்பேசியில் இருந்து உருவாக்கிக்கொள்ளும் வசதி என்று பல புதிய அம்சங்களை தொடர்ச்சியாக whatsapp நிறுவனம் வெளியிட்ட வண்ணம் இருக்கின்றது.

அந்த வகையில் ஒரே வட்ஸ்எப்பில் இரு கணக்குகளை உருவாக்கும் வசதியை இந்த 2024 ஆம் ஆண்டில் whatsapp நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

அலுவலகம் மற்றும் சொந்த பயன்பாடு என்று இரண்டிற்கும் ஒரே ஃபோனில் ஒரே வட்ஸ்எப்பில் பயன்படுத்தும் இந்த அம்சமானது பலருக்கும் ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்திருக்கிறது.

இந்த வசதியை பயன்படுத்த முதலில் உங்களுடைய whatsapp அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதன்பிறகு whatsappக்குள் சென்று வலது பக்க மேல் முனையில் உள்ள அந்த மூன்று புள்ளியை தொடும்பொழுது அதில் உங்கள் சுயவிவர பக்கத்தை உங்களால் பார்க்க முடியும். அதில் Accounts என்ற பக்கத்திற்கு சென்று அங்கு “எட் எக்கவுண்ட்” என்று காண்பிக்கப்படும் அந்த இடத்தில் நீங்கள் லொகின் செய்து ஒரே நேரத்தில் உங்களால் இரண்டு கணக்குகளை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

ஒரே கைப்பேசியில் ஒரே எண்ணில் இரண்டுக்கும் மேற்பட்ட கணக்குகளை உங்களால் இனி எளிமையாக இந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

Exit mobile version