Site icon Tamil News

இலங்கை: இரண்டு புதிய அமைச்சர்கள் நியமனம்

பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஸ் மற்றும் அலி சாஹிர் மௌலானா ஆகியோர் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

சமகி ஜன பலவேகய (SJB) பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தொழிலாளர் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா அபிவிருத்தி திட்டங்கள் அமைச்சரவை அல்லாத அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

2023 டிசம்பரில், பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் SJB இன் பசறை அமைப்பாளராக இருந்து நீக்கப்பட்டு பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டார். 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் உறுதியளித்துள்ளார்.

கடந்த வாரம் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்திருந்தார். பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தலைமையிலான SLMC எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு நிபந்தனையுடன் ஆதரவு வழங்குவதாக அறிவித்திருந்த போதிலும் அவர் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கியுள்ளார்.

Exit mobile version