Tamil News

மட்டக்களப்பிற்கு பைக்கில் கஞ்சாவை கடத்திய இருவர் கைது!

அக்கரைப்பற்றில் இருந்து மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்துக்கு மோட்டார்சைக்கிள் ஒன்றில் கஞ்சாவை கடத்திச் சென்ற இருவரை செவ்வாய்க்கிழமை களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பெரிய கல்லாறு பகுதியில் வைத்து கைது 9 கிலோ 540 கிராம் கஞ்சாவுடன் கைதுசெய்துள்ளதாக மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி டி.எஸ்.எஸ்.கே. தெலங்காவலகே தெரிவித்தார்.

மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றையடுத்து கிழக்கு பிராந்திய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித்ரோகன வின் ஆலோசனைக்கமைய உதவி பொலிஸ் மா அதிபர் எம்.பி.லியனகே , சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எதிர்மன்ன, உதவி பொலிஸ் அத்தியட்சகர் கே.எம். ஏ.கே பண்டார ஆகியோரின் வழிகாட்டலில் இந்த கைதுசெயற்பாடு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி டி.எஸ்.எஸ்.கே. தெலங்காவலகே தலைமையில் சிறப்பு போதை பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப்இன்பெஸ்டர் ஆர்.எம்.ஆர். சதுரங்க, பி.எஸ்.டபிள்யூ.எம்.ஏ.வெளகெதர, டி..டிபிள்யூ. வனசிங்க, டபிள்யூ.எம்.எஸ்.ஜ.வீரசிங்க, ஆர்.எம்,பி.பீ.ரத்நாயக்கா, எஸ்.ஜ.எம். அம்ஜாட, கே.தனுஷன், குணதிலக ஆகியோர் கொண்ட பொலிஸ் குழுவினர் பெரிய கல்லாறு பிரதான வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்

இதன் போது மோட்டர்சைக்கிள் ஒன்றில் கஞ்சாவை கடத்திச் சென்ற இரு வியாபரிகளை மடக்கி பிடித்து கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 9 கிலோ 540 கிராம் கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பாவித்த மோட்டர்சைக்கிள் ஒன்றையும் மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் அக்கரைப்பற்று 6ம் பிரிவைச் சேர்ந்த 33, 42 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் நீண்டகாலமாக கஞ்சாவியாபாரத்தில் ஈடுபட்டுவந்தவர்கள் எனவும் இவர்களை களுவாஞ்சிக்குடி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version