Site icon Tamil News

ஸ்வீடன் நேட்டோவில் இணைய துருக்கி ஒப்புதல்!

ஸ்வீடனை நேட்டோவில் சேர அனுமதிக்க துருக்கி ஒப்புக்கொண்டது.  வில்னியஸில் நடந்த பேச்சுவார்த்தையில் இதற்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இக்கட்டான நேரத்தில் அனைத்து நேட்டோ நட்பு நாடுகளின் பாதுகாப்பிற்கும் பயனளிக்கும் ஒரு வரலாற்றுப் படி எனவும், இது நம் அனைவரையும் வலிமையாகவும் பாதுகாப்பாகவும் ஆக்குகிறது” எனவும் ஜென்ஸ் ஸ்டோல்டன் பெர்க் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்சன், தான் “மிகவும் மகிழ்ச்சியாக” இருப்பதாகவும், “ஸ்வீடனுக்கு  இது ஒரு நல்ல நாள் எனவும் தெரிவித்துள்ளார்.

துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் எடுத்த முடிவு இன்னும் அந்த மாகாணத்தின் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. என்பதும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version