Site icon Tamil News

கொந்தளிப்பாக காணப்படும் கடற்பரப்புகள் : இலங்கை மக்களின் கவனத்திற்கு!

இலங்கையை சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசுவதுடன் அவ்வப்பொழுது கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, மறு அறிவித்தல் வரை கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என கடல் மற்றும் மீனவ சமூகத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்பிட்டியில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையில் கடல் அலைகள் 2.5 – 3.0 மீற்றர் உயரம் வரை எழும் சாத்தியம் காணப்படுகின்றது.

இதன் காரணமாக கல்பிட்டி, கொழும்பு, காலி முதல் மாத்தறை வரை கடல் அலைகள் நிலத்தை நோக்கி வருவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வரும் அறிவிப்புகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Exit mobile version