Site icon Tamil News

பிரான்ஸில் நடந்த விபரீதம் – கணவனின் வாகனத்தால் பரிதாபமாக உயிரிழந்த மனைவி

பிரான்ஸில் பெண் ஒருவர் கணவனின் காரினால் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

காருக்கும் சுவற்றுக்கும் இடையே சிக்குண்டு உடல் நசுங்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பழுதடைந்த காரை 70 வயது மதிக்கத்தக்க அதன் உரிமையாளர் திருத்திக்கொண்டிருந்த போது கார் திடீரென இயங்கி முன்னோக்கி பயணித்துள்ளது.

இதன் போது சுவரோடு நின்றிந்த அவரது மனைவியை மோதித்தள்ளியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 66 வயதுடைய அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கணவர் காயமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Exit mobile version