Site icon Tamil News

புள்ளிப்பட்டியலில் முன் செல்ல இன்று கடுமையான பலப்பரீட்சை!

ஐபிஎல் தொடரின் 17-வது சீசனின் இன்றைய போட்டியாக மும்பை அணியும், பெங்களூரு அணியும் மோதுகிறது.

நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 25-வது போட்டியாக மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இரவு 7.30 மணிக்கு வான்கடே மைதானத்தில் மோதவுள்ளது. ஐபிஎல் தொடரின் மிகவும் எதிர்ப்பார்க்க படும் ஒரு போட்டியாக இந்த போட்டி ரசிகர்களால் பார்க்கப்படுகிறது.

இந்த இரு அணிகளுக்கும் இடையே எப்போது போட்டி நடந்தாலும் அது மிகவும் விறுவிறுப்பாகவே இருக்கும். இந்த போட்டியில் வெற்றி வெறும் அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முன்னேறி செல்வார்கள்.

இந்த இரு அணிகளுக்கும் இடையே தலா 32 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்த 32 போட்டியில் 18 முறை மும்பை அணியும், 14 முறை பெங்களூரு அணியும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் வெற்றியின் சதவீதம் படி இந்த போட்டியை மும்பை அணி வெற்றி பெறுவார்கள் என்று கணிக்கப்படுகிறது இருந்தாலும் இந்த போட்டியில் ஒரு விறுவிறுப்பு இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

எதிர்ப்பார்க்கப்படும் 11 வீரர்கள்
மும்பை அணி வீரர்கள்

ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா(கேப்டன்), டிம் டேவிட், முகமது நபி, ரொமாரியோ ஷெப்பர்ட், பியூஷ் சாவ்லா, ஜெரால்ட் கோட்ஸி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பெங்களூரு அணி வீரர்கள்

விராட் கோலி, ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் (கேப்டன்), ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சவுரவ் சவுகான், ரீஸ் டாப்லி, மயங்க் டாகர், முகமது சிராஜ், யாஷ் தயாள்

Exit mobile version