Tamil News

பிரபல நடிகை சோனாக்ஷிக்கு இன்று திருமணம்.. மதம் மாறினாரா சோனாக்ஷி

நடிகை சோனாக்ஷி சின்ஹா பாலிவுட்டின் முக்கியமான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். ஏழு ஆண்டுகளாக ஜாகீர் இக்பாலும் சோனாக்ஷியும் காதலித்து வந்த நிலையில் இன்று அவர்களுக்கு திருமணம் கோலாகலமாக நடைபெற உள்ளது.

இவர்களின் திருமணத்தை பார்க்க ஒட்டுமொத்த பாலிவுட்டும் தயாராக உள்ளது.

சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜாகீர் இக்பால் இருவரும் 2022 ஆம் ஆண்டு டபுள் எக்ஸ்எல் திரைப்படத்தின் சேர்ந்து நடித்தபோது காதலித்தாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன் 2020ம் ஆண்டில் இருந்தே இருவரும் டேட்டிங் செய்யத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. படவிழாக்கள், பொது நிகழ்வுகளில் இருவரும் பல இடங்களில் ஒன்றாக காணப்பட்டனர்.

இந்நிலையில் இன்று மாலை சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜாகீர் இக்பால் திருமணம் நடைபெற உள்ளது.

மேலும், சோனாக்ஷி இஸ்லாம் மதத்திற்கு மாறிதான் ஜாகீர் இக்பால் செய்து கொள்வதாக பரவிய வதந்தி குறித்து பேசிய ஜாஹீரின் தந்தை, “அவர் மதம் மாறவில்லை, அது நிச்சயம் நடக்காது.

அவர்களுடையது இதயங்களின் ஒன்றான பின் மதத்திற்கு எந்தப் பங்கும் இல்லை.நான் மனிதநேயத்தை நம்புகிறேன். இந்துக்களால் கடவுளை பகவான் என்றும் அழைக்கிறார்கள் முஸ்லிம்கள் அல்லா என்றும் அழைக்கிறார்கள். ஆனால் நாளின் முடிவில் நாம் அனைவரும் மனிதர்கள். எனது ஆசீர்வாதங்கள் ஜாகிர் மற்றும் சோனாக்ஷிக்கு நிச்சயம் உண்டு என்று கூறியுள்ளார்.

Exit mobile version