Tamil News

‘லியோ’ மேக்கிங்கை பார்த்து மெர்சலான உலக நாயகன்…

உலக நாயகன் கமல்ஹாசன், இன்று தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள லியோ படத்தை கண்டுகளித்துள்ளார். இதுகுறித்த லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் – தளபதி விஜய் கூட்டணியில் உருவான ‘லியோ’ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி, தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வருகிறது.

முதல் நாள் சுமார் 140 கோடிக்கு, மேல் இப்படம் வசூல் செய்த நிலையில், இரண்டாவது நாளில்… 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல் வெளியானது.

மேலும் முதல் நாளே, தளபதி விஜயின் ரசிகர்களுடன் சேர்ந்து, அனிருத், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் படம் பார்த்தனர்.

பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் படத்தை பார்த்து விட்டு, தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.

சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து, உலக நாயகன் கமல்ஹாசன் ‘லியோ’ படத்தை பார்த்துள்ளார். கமல்ஹாசனுக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டதாகவும், விக்ரம் படத்தை போல் இப்படத்திலும் லோகேஷின் மேக்கிங் இவரை மெர்சலாக்கியதாக கூறப்படுகிறது.

படத்தை பார்த்து முடித்ததும் கமல்ஹாசன் ‘லியோ’ படம் குறித்து தனது கருத்து தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version