Site icon Tamil News

ஐரோப்பிய நாடுகளில் ஏற்படவுள்ள நேர மாற்றம்

ஐரோப்பிய நாடுகளில் இந்த மாதம் மீண்டும் நேர மாற்றம் ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு ஐரோப்பிய நாடுகளில், ஒவ்வொரு வருடமும், மார்ச் மாதத்தில் வரும் கடைசி சனிக்கிழமை – ஞாயிற்றுக்கிழமை கோடை கால நேரம் மாற்றம் ஏற்படும்.

அதன் பிரகாரம், மார்ச் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை 23 மணித்தியாலங்களை கொண்டிருக்கும்.

பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்திற்கு முன்பு ஒருமுறையும் குளிர்காலத்திற்கு முன் ஒருமுறையும் நேர மாற்றம் செய்யப்படுகிறது.

அதற்கமைய, மார்ச் மாதம் 30ஆம் திகதி முதல் இந்த நேர மாற்றம் அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 30 சனிக்கிழமை இரவு முதல் மார்ச் 31 ஞாயிற்றுக்கிழமை வரை கோடை நேரமாக மாற்றப்படும். மீண்டும், ஒரு மணி நேரம் முன்னோக்கி நகரும்.

நேர மாற்ற நடைமுறை அறிமுகமாகி 103 ஆண்டுகள்.ஐரோப்பாவில் ஆண்டுக்கு இரண்டு தடவைகள் கடிகாரத்தில் நேரம் மாற்றப்படும்.வசந்தகாலத்தில் ஒரு மணி நேரம் முன்னோக்கியும், இலையுதிர் காலத்தில் ஒரு மணி நேரம் பின்னோக்கியும் கடிகாரத்தில் நேரம் மாற்றப்படும்.

வசந்தகாலம் துவங்கும் மார்ச் மாதத்தின் கடைசி ஞாயிறு அதிகாலை இரண்டு மணி மூன்று மணியாக மாற்றப்படும். இலையுதிர் காலமான அக்டோபர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை, மீண்டும் ஒரு மணி நேரம் பின்னோக்கி மாற்றப்படும். ஐரோப்பாவில் நேரத்தில் இவ்வாறு மாற்றம் செய்யும்.

Exit mobile version