Site icon Tamil News

ஜெர்மனியில் சிறுவனின் உயிரை பறித்த TikTok சவால் – பொலிஸார் எச்சரிக்கை

ஜெர்மனியில் 17 வயதுடைய சிறுவன் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியில் கோஸ்வெல் என்ற பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம் இடம் பெற்றுள்ளது.

17 வயதுடைய சிறுவன் ஒருவர் டிக்டொக் மோகத்ததால் பரிதாபமாக இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதாவது அண்மை காலங்களில் டியுரோன் என்று சொல்லப்படுகின்ற வாசனை திரவங்களை யார் கூடுதலாக சுவாசிப்பார் என்ற சவால் ஒன்று டிக்டொக் என்று சொல்லப்படும் சமூக வலைதளங்களில் பிரபல்யமடைந்து வருகின்றது.

அதனை வீடியோவாக பதிவு செய்யப்பட்டு TikTok செயலியில் வெளியிடுவது இயல்பான விடயமாகும்.

இந்நிலையில் 17 வயதுடைய இளைஞர் இந்த வாசனை திரவியத்தை நீண்ட நேரம் சுவாசித்ததால் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறிப்பாக டிக்டொக் மோகத்தால் இவ்வாறு இளைஞர்கள் தங்களது உயிரை இழப்பது அதிகரித்து வருகின்றது.

இவ்வாறான வீடியோக்கள் வெளியிடுவதற்கான இளைஞர் யுவதிகள் உயிரை பணயம் வைக்கும் சம்பவம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவத்தின் மூலம் இளைஞர் யுவதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version