Site icon Tamil News

WhatsAppஇல் கடுமையாகும் கட்டுப்பாடு

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது.

பயனர்கள் வசதிக்கு ஏற்ப அம்சங்களை அறிமுகம் செய்யும் நிறுவனம் பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிலும் தனி கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது, வாட்ஸ்அப் ப்ரொஃபைல் பிக்சருக்கான அம்சத்தை வழங்குகிறது.

இது ஆண்ட்ராய்டு, ஆப்பிள் பயனர்களுக்கு வழங்குகிறது. அதாவது புதிய அம்சத்தில், வாட்ஸ்அப்பில் மற்ற பயனரின் ப்ரொஃபைல் பிக்சரை ஸ்கிரீன் ஷாட் எடுப்பதை தடை செய்கிறது.

முன்னதாக ப்ரொஃபைல் பிக்சர் Save செய்வதை நிறுவனம் தடை செய்ய நிலையில், தற்போது இதுவும் கொண்டு வரப்படுகிறது.

பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த அம்சம் கொண்டு வரப்படுகிறது என நிறுவனம் கூறியுள்ளது. இது ஆப்பிள் பயனர்களுக்கு வழங்குவதற்கான சோதனை செய்யப்பட்டு வருகிறது.

Exit mobile version