Tamil News

தமிழக அரசியலின் 3 எழுத்து வாரிசு “விஜய்” – போஸ்டரில் பரபரப்பு

இந்த ஆண்டு தொடக்கத்தில் தளபதி விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை மக்களுக்கு அறிமுகம் செய்த அதே நேரம் அவர் திரைத்துறையில் இருந்து விலகப் போகிறேன் என்று கூறி அதிர்்சியை ஏற்படுத்தினார்.

வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தனது கட்சியின் சார்பாக முதல்வர் வேட்பாளராக தளபதி விஜய் களமிறங்குகிறார்.

ஏற்கனவே அவருடைய கட்சியின் கொடியும், கட்சி பாடலும் வெளியான நிலையில் எதிர்வரும் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை அவர் நடத்த உள்ளார்.

இந்த நிலையில், திருச்சியை சேர்ந்த த.வெ.க தொண்டர்கள் அடித்துள்ள போஸ்டர் தான் தற்பொழுது மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

“ஈவேரா, அண்ணா, எம்ஜிஆர் இவர்கள் வரிசையில் மூன்றெழுத்து அரசியல் வாரிசாக தளபதி விஜய் விரைவில் வர இருக்கிறார்.

2024ல் எழுச்சி மாநாடு 2026ல் தமிழ்நாடு” என்கின்ற வாசகங்களும் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது

Exit mobile version