Site icon Tamil News

சிங்கப்பூரில் அச்சுறுத்தும் ஸீக்கா வைரஸ் – பலர் பாதிப்பு

சிங்கப்பூரில் அச்சுறுத்தும் ஸீக்கா வைரஸ் – பலர் பாதிப்ப

சிங்கப்பூரில் இந்த ஆண்டின் முதல் பாதியில் 22 ஸீக்கா வைரஸ் நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ இதனை தெரிவித்துள்ளார்.

அதில் 15 சம்பவங்கள் கோவன் வட்டாரத்தில் பதிவாகின. அங்கு பரவல் அபாயம் அகன்றுவிட்டதாகவும் அந்த வட்டாரம் தற்போது கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

மற்ற 7 சம்பவங்களுக்கு ஒன்றுக்கொன்று தொடர்பில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கப்பூரில் ஸீக்கா சம்பவங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குத் சுற்றுப்புற அமைச்சர் எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார். ஸீக்கா தொற்று ஏடிஸ் கொசு மூலம் பரவுவதால் அதைக் கட்டுப்படுத்த Project Wolbachia உதவக்கூடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் கொசுக்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் நல்ல வீட்டுப் பராமரிப்புக்கும் அது ஈடாகாது என்று அமைச்சர் ஃபூ வலியுறுத்தினார்.

Exit mobile version