Site icon Tamil News

இரவில் தூக்கம் வராமல் தவிப்பவர்களுக்கு இந்த பதிவு

இன்றைய காலகட்டத்தில்,தூக்கமின்மை என்பது ஒரு பெரிய உளவியல் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

இதில் குறிப்பாக மொபைல் போன்கள் இரவு நேரங்களில் நாம் தூங்குவதைத் தடுக்கும் ஒரு பெரிய காரணமாக அமைகிறது.’அளவுக்கு மிஞ்சினால்அமிர்தமும் நஞ்சு’ என்ற பழமொழி போல் ,முறையற்ற மொபைல் போன்களின் பயன்பாடு அதற்கு நாம் அடிமையாக்குவதோடு , பலர் இரவு நேரங்களில் தூக்கமின்றி அவதிப்படுகின்றனர்.

தூக்கம் இல்லையெனில், உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் ஒரு பிரச்சனையாகும். இது கவலை, மன அழுத்தம், உடல் எடை அதிகரிப்பு, மற்றும் இதய நோய்கள் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இரவு நேரங்களில் தூக்கமின்மையை தவிர்க்க சில வழிகள் உள்ளன

தினமும் ஒரே நேரத்தில் தூங்கி, ஒரே நேரத்தில் எழுந்திருக்கும் பழக்கத்தை கொண்டிருக்க வேண்டும். இது உங்கள் உடலுக்கு ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்கி அன்றைய பொழுதை சிறப்பாக்க வழிவகுக்கும்.

ஒரு மனிதனுக்கு தினமும் குறைந்தது 7 மணி முதல் 8 மணி நேரம் தூக்கம் அவசியம். ஆனால், அதுவே அதிகமாக தூங்குவது நல்லது இல்லை, சோம்பேறி தனத்தை உண்டாக்கும். மேலும், தூங்குவதற்கு முன் காஃபின், ஆல்கஹால் மற்றும் புகையிலை, போன்ற பொருட்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன் சிறுது உடற்பயிற்சி செய்வது நல்லது. ஆனால், தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் உடற்பயிற்சி செய்ய கூடாது. உடற்பயிற்சி செய்த பின்பு, தூங்குவதற்கு முன்பு வெதுவெதுப்பான நீரில் குளிப்பது நல்லது. இது உங்களுக்கு நல்ல தூக்கத்தை வரவைக்கும்.

நீங்கள் தூங்கும் இடம் எந்தவித இரைச்சல் தொந்தரவு இல்லாமல் அமைதியான சுற்றுவட்டத்துடன் இருக்கமாறு வைத்து கொள்ள வேண்டும். அதன்பின், நீங்கள் எதை பற்றியும் சிந்திக்காமல், உங்கள் மனதை அமைதி நிலையில் வைத்திருக்க உங்களுக்கு பிடித்தமான மெலடி பாடல்களை கேட்கலாம். இது உங்களது தூக்கத்தை மேம்படுத்த உதவும்.

இன்னும் உங்களுக்கு தூக்கம் வரவில்லை என்றால், படுக்கையை விட்டு எழுந்து அடுத்த நாளைக்கான வேலையை செய்யுங்கள். ஒரு மணி நேரத்திற்குப் பின்பு, மீண்டும் படுக்கைக்குச் சென்று தூங்கி பாருங்கள்.

இந்த வழிமுறைகளைப் பின்பற்றினால், இரவு நேரத்தில் தூக்கம் வருவதற்கு உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

மேலும் சில கூடுதல் குறிப்புகள்:

Exit mobile version