Site icon Tamil News

எனக்கானவர் இவர்தான் : ஒரு வழியாக காதலை உறுதிப்படுத்திய மில்க் பியூட்டி!

தமிழில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துக்கொண்ட நடிகை தமன்னா தற்போது ஜெய்லர் படத்தில் நடித்துள்ளார்.

மேலும் பாலிவுட்டில் இவர் நடித்துள்ள ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ விரைவில் வெளியாகவுள்ளது.

நடிகை தமன்னா பாலிவுட் பிரபலம் விஜய் வர்மாவை காதலித்து வருவதாக சமீப காலமாக சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவி வந்தது.  இந்நிலையில்  நடிகை தமன்னா தற்போது இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில்  ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2-வில் தான் நாங்கள் பழகினோம். விஜய் வர்மாவிடம் என்னால் இயல்பாக பழக முடிந்தது. இவர் தான் நான் எதிர்பார்த்த நபர்.

தமன்னா -விஜய் வர்மா நான் எனக்கான ஒரு உலகத்தை உருவாக்கி வைத்துள்ளேன். பொதுவாக ஒரு பெண் அவரது வாழ்க்கை துணைக்காக தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.

எனது உலகத்தை புரிந்து கொண்ட ஒருவர் எனக்கு கிடைத்துள்ளார். அவரை நான் காதலிக்கிறேன். விஜய் வர்மா எனது மகிழ்ச்சியான இடம்’ என்று பேசியுள்ளார்.

Exit mobile version