Tamil News

மட்டக்களப்பில் விசேட அதிகரடிப்படையின் பாதுகாப்புடன் சிறப்பாக நடைபெற்ற திருச்சிலுவை பாதை நிகழ்வு

உலகெங்கும் ஜேசுக்கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் பெரிய வெள்ளியாக அனுஸ்டிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்றைய தினம் பெரியவெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருசிலுவை பாதை நிகழ்வுகள் பக்தி பூர்வமாக நடைபெற்றது.

மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் இன்றைய தினம் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.

விசேட அதிகரடிப்படையின் பாதுகாப்புடன் இந்த நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலய சிலுவைப் பாதை இன்று (29.03.2024) குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியுடாக தேற்றாத்தீவு புனித யூதா ததேயு தேவாலயத்தை வந்தடைந்தது.

இயேசு துன்பங்கள் அனுபவித்து உயிர் துறந்த தினமாக பெரிய வெள்ளிக்கிழமையை கிறிஸ்தவர்கள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கின்றார்கள்.

மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் சிலுவைச் சாவினை ஏற்றுக் கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று புனிதயூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் இடம்பெற்றது.

திருச்சிலுவைப்பாதையானது காலை குருக்கள்மடம் புனித பிரான்சிஸ்அசீசியார் தேவாலயத்திலிருந்து பாதையாத்திரையாக ஆரம்பிக்கப்பட்டு தேற்றாத்தீவு புனிதயூதாததேயு திருத்தலத்தினை சென்றடைந்தது.
இந்நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பக்தியுடன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது

Exit mobile version