Tamil News

என்ன கன்றாவிடா இது? எமி ஜாக்சனை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்.. வைரலாகும் படங்கள்

தமிழில் மதராசபட்டினம், தெறி, ஐ போன்ற படங்களில் நடித்து பேமஸ் ஆன நடிகை எமி ஜாக்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.

ஏ.எல்.விஜய் இயக்கிய மதராசபட்டிணம் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் எமி ஜாக்சன். அப்படத்தில் வெளிநாட்டு பெண் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொறுந்தி இருந்தார் எமி.

மதராசப்பட்டிணம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் கோலிவுட்டில் எமி ஜாக்சனுக்கு பட வாய்ப்புகள் குவியத்தொடங்கின. அதன்படி விக்ரம் உடன் தாண்டவம் மற்றும் ஐ, விஜய் உடன் தெறி, ரஜினிக்கு ஜோடியாக 2.0 போன்ற படங்களில் நடித்தார்.

இதையடுத்து லண்டனை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து வந்த எமி ஜாக்சன் அவரும் லிவ்விங் டுகெதராக வாழ்க்கையும் நடத்தி வந்தார். இந்த ஜோடி, திருமணத்துக்கு முன்னரே ஆண் குழந்தை பெற்றுக்கொண்டது. குழந்தை பிறந்த பின்னர் நிச்சயம் செய்துகொண்ட இந்த ஜோடி, திருமணம் நெருங்கிய சமயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக பிரிந்துவிட்டனர்.

முதல் காதல் தோல்வியில் முடிந்ததை அடுத்து தற்போது இரண்டாவதாக எட் வெஸ்ட்விக் என்கிற நடிகரை காதலித்து வருகிறார். இருவரும் அடிக்கடி ஜோடியாக டேட்டிங் செல்லும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது தன் காதலனுடன் கவர்ச்சி உடை அணிந்து வித்தியாசமான போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார் நடிகை எமி ஜாக்சன். அந்த போட்டோஷூட்டுக்கு லைக்குகளை போல் கமெண்ட்டுகளும் அதிகளவில் குவிந்து வருகின்றன.

எமி ஜாக்சனின் இந்த போட்டோஷூட்டுக்கு கமெண்ட்டுகள் அதிகளவில் குவியக் காரணம் அவரின் ஹேர்ஸ்டைல் தான். எமி ஜாக்சனின் ஏடாகூடமான அந்த ஹேர்ஸ்டைலை பார்த்த ரசிகர்கள் பார்ப்பதற்கு அயர்லாந்து நடிகர் சிலியன் மர்பி போல இருப்பதாக ஒப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் அந்த புகைப்படத்தில் எமி ஜாக்சனின் முகமும் வித்தியாசமாக இருப்பதனால், பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளீர்களா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சிலரோ எமி ஜாக்சனுக்கு என்னாச்சு, நல்லா இருந்த மண்டைய ஏன் இப்படி குதறி வச்சிருக்காங்க என கிண்டலடித்து வருகின்றனர்.

 

 

Exit mobile version