Site icon Tamil News

இந்தியாவில் முடி வளர்ப்பில் கின்னஸ் சாதனை படைத்த பெண்!

உத்தர பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் முடி வளர்ப்பில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஸ்மிதா ஸ்ரீவஸ்தவா என்ற பெண்ணே இந்த சாதனையை படைத்துள்ளார்.

இவர் சிறுவயது முதலே தலைமுடி வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். குறித்த பெண்மணி முடியை பராமரிப்பதற்கு கவனம் செலுத்தியுள்ளார்.

ஸ்மிதாவுக்கு சிறு வயதில் முடியை வெட்டிவிட்டனர். 14 வயதுக்கு பிறகு தனது தலைமுடியை வெட்டுவதை அவர் தவிர்த்தார்.

இதனால் அவரது முடி தொடர்ந்து வளர்ந்து தற்போது 7 அடி மற்றும் 9 அங்குலம் உள்ளது. 236.22 சென்றி மீற்றர் உள்ளது. இதன்மூலம் உலகின் நீளமான தலைமுடியை கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

ஸ்மிதா குறித்த சாதனை பற்றி கூறுகையில்,பெண்களுக்கு அழகே நீண்ட தலைமுடிதான். வாரத்திற்கு 2 நாட்கள் தலைமுடியை வாஷ் செய்து வருகிறேன்.

முடியை வாஷ் செய்தல், உலர்த்துதல், சிக்கல் எடுத்தல் மற்றும் ஸ்டைலாக பின்னுதல் என இந்த நடைமுறையை செய்து முடிக்க கிட்டத்தட்ட 3 மணி நேரம் ஆகிறது என தெரிவித்தார்.

இந்தி நடிகைகளின் முடி அலங்காரத்தால் ஈர்க்கப்பட்டு தலைமுடியை வளர்க்க ஸ்மிதா தொடங்கியுள்ளார்.

நீண்ட தலைமுடிக்காக 2024 கின்னஸ் புத்தகத்தில் இது வெளியிடப்படும் என அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Exit mobile version