Site icon Tamil News

முகத்திற்கு அழகு சேர்க்க பிளாஸ்டிக் சேர்ஜரி செய்த பெண் : இறுதியில் நேர்ந்த விபரீதம்!

பெண் ஒருவர் தன்னுடைய பிளாஸ்டிக் சேஜரி குறித்த அனுபவங்களை 14 தொடராக டிக்டொக்கில் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது அவருடைய கனவு எவ்வாறு சிதைந்தது என்பதை இது வெளிப்படுத்துகிறது.

@kalyeyfavs என்ற கணக்கின் கீழ் இடுகையிடப்பட்ட பதவில், பெண் ஒருவர் தன்னுடை முகத்திற்கு பிளாஸ்டிக் செர்ஜரி செய்தபின் தான் எதிர்கொண்ட மோசமான விளைவை குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் எல்லாம் நன்றாக இருப்பதாக தெரிந்தாலும் பின்னர், அவருடைய கண்ணத்தில் பருபோன்ற ஒரு கட்டி ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த கட்டி உடைந்து சீல் வடிந்ததுடன், அதில் இருந்து புழுக்கள் வெளியேறியதாக தெரிவித்துள்ளார்.

வேறு வழியின்றி அவர் உடனடியாக மருத்துவரை நாடியுள்ளார். பிளாஸ்டிக் சர்ஜரி தவறாக நடந்தமையால் ஏற்பட்ட அலர்சி இந்த நிலைக்கு காரணம் என மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட வைத்திய நிபுணர் ஒருவர், இது ஒரு வகையான புண் ஆகும், இது நிரப்பு சிகிச்சையின் போது அல்லது அதற்குப் பிறகு தூண்டப்பட்ட தொற்றுநோயால் ஏற்படலாம். ‘புழு’ என்பது சீழ் வடிகட்ட பயன்படுத்தப்பட்ட மருத்துவ நாடாவின் ஒரு வடிவம் எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் பிளாஸ்டிக் சர்ஜன்களின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் இங்கிலாந்தில் 900,000 போடோக்ஸ் ஊசிகள் செய்யப்படுவதாக அரசாங்க ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

இது இங்கிலாந்தை விட அமெரிக்காவில் அதிகம். அங்கு மில்லியன் கணக்கான மக்கள் இந்தவகையான ஊசியை பயன்படுத்துகிறார்கள். இதனால் பலர் அலர்ச்சி நோய்க்கி உள்ளாகியுள்ளனர்.

Staphylococcus aureus மற்றும் Streptococcus pyogenes ஆகியவை தோலை பாதிக்கக்கூடிய இரண்டு வகையான பாக்டீரியாக்கள். பல ஸ்டாப் நோய்த்தொற்றுகள் தானாகவே போய்விடும், ஆனால் சிக்கலைத் தீர்க்க நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தேவைப்படலாம் எனக் கூறப்படுகிறது.

Exit mobile version