Site icon Tamil News

இஸ்ரேலில் உச்சம் தொட்டுள்ள யுத்தம்!!! 20 இலங்கை குடும்பங்கள் வெளியேற முடிவு

காஸா பகுதியில் இடம்பெற்று வரும் மோதல்கள் காரணமாக இஸ்ரேலில் உள்ள 20 இலங்கை குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற தீர்மானித்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.

இதுவரை நாட்டில் நிவாரண முகாம்களையோ அல்லது வேறு எந்த நிவாரணத் திட்டங்களையோ நடைமுறைப்படுத்தக்கூடிய அளவுக்கு நிலைமை மோசமாக இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டில் விசேட பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதன் பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஹமாஸ் தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன்னர் எகிப்து இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

எனினும், இந்த அறிக்கையை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முற்றாக நிராகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

75 ஆண்டு கால வரலாற்றில் இஸ்ரேல் மீது பாலஸ்தீன போராளிகள் நடத்திய மிக மோசமான தாக்குதல் இதுவாகும்.

இவ்வாறான தாக்குதலை இஸ்ரேல் புலனாய்வு அமைப்புகள் தடுக்கத் தவறியமை தொடர்பில் சர்வதேச சமூகம் தற்போது பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றது.

Exit mobile version