Site icon Tamil News

இலங்கையில் 2 மாத குழந்தையின் உயிரை பறித்த சுவர்

ஓமந்தை – புதிய வேலர் சின்னக்குளம் பகுதியில் வீடொன்றின் சுவரின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

நேற்று மாலை இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் 2 மாதக் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.

சம்பவத்தின் போது குழந்தையின் தாயும் உடனிருந்ததாக கூறப்படுகிறது.

உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version