Site icon Tamil News

சீனாவை உலுக்கிய சூறாவளி.. ஒரே நாளில் 10 பேர் பலி

சீனாவில் பல்வேறு நகரங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வரும் நிலையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர்

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இந்த சூறாவளி காற்றில் பல்வறு உயிர்சேதங்கள், பொருள்சேதங்கள் ஏற்பட்டுள்ளன என சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பாக, சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சுங் மற்றும் யாசெங் நகரில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணியளவில் சூறாவளி காற்று வீசியது.

மேலும், சுகியன் நகரின் சில பகுதிகளில் சூறாவளி காற்று தாக்கியுள்ளது. மேலும் பலத்த மழை பெய்யும் என சீன வானிலை ஆய்வு மையமும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி இருந்தது.

இந்த சூறாவளியால் 5,500க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 137 வீடுகள் சேதமடைந்துள்ளது. நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு இடம் பெயர்ந்துள்ளனர்..

சூறாவளி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் கடந்த சில வருடங்களாகவே பல இறப்புகள் நிகழ்ந்துள்ளன.

2022 இல், ஒரு சூறாவளியால் ஒருவர் உயிரிழந்தார் என்றும், 2021 ஆம் ஆண்டு 4 பேர் உயிரிழந்தனர் என்றும் , 2021இல் வுஹானில் 8 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version