Site icon Tamil News

தலைமுடியால் வடகொரியாவுக்கு வந்த சோதனை: தலையில் கை வைத்த பொது மக்கள்

 

வடகொரியாவில் தலைமுடி உதிர்தல் என்ற பரவலான பிரச்சனை அந்நாட்டு அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் நடவடிக்கைகள் எப்போதும் மர்மமாகவே இருந்து வருகிறது. ஏவுகணை சோதனைகளுக்கு மட்டுமே வடகொரியாவின் பெயர் சர்வதேச செய்திகளில் வருகிறது.

உலகமே கொரோனா வைரஸால் தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், எல்லைகள் மூடப்பட்டன.

இதனால், மர்மம், சர்ச்சைகள், விசித்திரங்கள் நிறைந்த நாடான வடகொரியாவில், மக்களின் தலைமுடி வேகமாக உதிர்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக நியூயார்க் போஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகொரியாவில் பயன்படுத்தப்படும் சோப்பு மற்றும் ஷாம்பூவில் அதிக அளவு ரசாயனங்கள் கலந்திருப்பதே இதற்கு முக்கிய காரணம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அதே நேரத்தில், வடகொரியாவில் உள்ள அனைத்து ஆண்களும் 10 ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்ற வேண்டும். தொடர்ந்து தொப்பி அணிவதும் விரைவான முடி உதிர்தலுக்கு ஒரு காரணமாக சுட்டிக்காட்டப்படுகிறது.

முடி உதிர்தலுக்கு சிகிச்சை அளிக்க போதிய பணம் இல்லாததால், நாட்டு மக்கள் தலையில் கைவைத்து அமர்ந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக வடகொரியா மட்டுமின்றி தென்கொரியாவிலும் முடி உதிர்தல் பிரச்சனை தீவிரமாக உள்ளது.

கடந்த ஆண்டு நாட்டில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது, எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் முடி உதிர்வுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என உறுதியளித்தது நினைவிருக்கலாம்.

Exit mobile version