Site icon Tamil News

இந்திய அணிக்கு 353 ஓட்டங்கள் இலக்கு

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதில், முதலில் ஆஸ்திரேலிய அணி வீரரான டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் களமிறங்கினர். இதில் இருவரும் அரை சதம் அடித்தனர்.

டேவிட் வார்னர் 34 பந்துகளில் 56 ரன்களும், மிட்செல் மார்ஷ் 84 பந்துகளில் 96 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இவர்களை தொடர்ந்து விளையாடிய, ஸ்டீவன் ஸ்மித் 74 ரன்களும், மார்னஸ் லாபஸ்சாக்னே 72 ரன்களும், அலெக்ஸ் காரே 11 ரன்களும், கிளென் மேக்ஸ்வெல் 5 ரன்களும், கேமரன் கிரீன் 9 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

பாட் கம்மின்ஸ் 19 ரன்களிலும், மிட்செல் ஸ்டார்க் ஒரு ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில், இந்த போட்டியின் முதல் பாதியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து, இந்திய அணி 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ளது.

Exit mobile version