Site icon Tamil News

இந்தியாவில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மத தீவிரவாதிகள் அல்ல – பாதுகாப்பு செயலாளர்

பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் போதைக்கு அடிமையானவர்கள் என்றும் மத தீவிரவாதிகள் அல்ல என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வு பெற்ற) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்றார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

“எங்கள் புலனாய்வு அமைப்புகள் இந்த விஷயத்தில் ஒரு கண் வைத்திருக்கிறது. இந்தியா சென்ற நான்கு பேரிடம் விரிவான விசாரணை நடந்து வருகிறது, அவர்களது சகாக்களும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

நடந்து கொண்டிருக்கும் விசாரணை குறித்து என்னால் கருத்து கூற முடியாது. எனினும், கைது செய்யப்பட்ட நால்வரும் போதைக்கு அடிமையானவர்கள், மத தீவிரவாதிகள் அல்ல  அல்ல.

எமது தேசிய பாதுகாப்பு தொடர்பில் நாம் விழிப்புடன் இருக்கின்றோம் என பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் என்னால் மக்களுக்கு உறுதியளிக்க முடியும். ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் போன்ற சம்பவங்கள் இனி நடக்காது.

எவ்வாறாயினும், இந்தியாவிடம் இருந்து பெறப்பட்ட உளவுத்துறையின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version