Site icon Tamil News

இந்தியாவில் பெண் மருத்துவரின் மரணத்திற்கு நீதி கோரி முன்னெடுக்கப்படும் போராட்டம்!

இந்தியாவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண் வைத்தியருக்கு ஆதரவாக பலரும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அவருக்கு நீதி கோரி இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தங்களது ஆதங்கமான கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9 ஆம் திகதி கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு கெதல்கத்தாவில் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் கலவரமாகவும் மாறியது.

குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையிலும் போராட்டம் ஓய்ந்தபாடில்லை. இதற்கிடையில் இந்த வழக்கை மேற்கு வங்க அரசு சிபிஐ இடம் ஒப்படைத்துள்ளது .

அந்த வகையில் இன்று  (17.08) காலை 6 மணி முதல் (ஆகஸ்ட்18) காலை 6 மணி வரை நாடு முழுவதும் மருத்துவ சேவைகளை நிறுத்துவதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version