Site icon Tamil News

சொத்து வரி அறவிடுவதை இலங்கை அரசாங்கம் ஒத்தி வைத்துள்ளது

சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கையில் அமுல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள சொத்து வரியை அமுல்படுத்துவது 2025 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்படுவதாக அரசாங்க உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னதாக, அடுத்த மாதம் 2024 ஆம் ஆண்டு முதல் சொத்து வரியை நடைமுறைப்படுத்துமாறு நிதி நிதியம் இலங்கைக்கு அறிவித்திருந்தது.

எனினும், இலங்கை அரசாங்கம் நடத்திய ஆய்வில், உலகின் எந்த நாட்டிலும் தற்போது சொத்து வரி நடைமுறைப்படுத்தப்படவில்லை என தெரியவந்துள்ளது.

எனவே, இதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்த மாதிரித் திட்டத்தை வழங்குமாறு இலங்கை ஏற்கனவே நாணய நிதியத்திடம் விசேட கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.

மாதிரித் திட்டத்தைப் பெற்ற பிறகு, 2025 ஆம் ஆண்டு முதல் சொத்து வரியை அமல்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று உயர்மட்ட வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

Exit mobile version