Site icon Tamil News

இங்கிலாந்தில் வாகன சோதனையின் போது பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இங்கிலாந்தில் வழக்கமான வாகன சோதனை ஒன்றின்போது, தவறான திசையின் சென்ற லொறி ஒன்றை பொலிசார் மடக்கியுள்ளனர்.

இங்கிலாந்தின் எசெக்ஸ் பகுதியில் அந்த லொறியை மடக்கிய பொலிஸார், லொறியை சோதனையிட்டுள்ளனர். அப்போது, ஒரு பெட்டிக்குள், அலுமினிய காகிதத்தில் பொதிந்துவைக்கப்பட்ட சாண்ட்விச் பாக்கெட்கள் போல சில பாக்கெட்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

அவற்றை பிரித்துபார்த்த பொலிஸாருக்கு அதிர்ச்சியளிக்கும் விடயம் ஒன்று காத்திருந்தது. அவை சாண்ட்விச்கள் அல்ல. பணத்தை அலுமினிய காகிதத்தில் சுற்றி, சாண்ட்விச் போல கொண்டு சென்றுள்ளார் அவர்.

அத்துடன், பொலிஸார் கண்ணில் சிக்காமல் இருக்கும் முயற்சியில்தான் தவறான பாதையிலும் அவர் பயணித்ததாக கருதப்படுகிறது.அந்த லொறிக்குள் கிடைத்த பெட்டிக்குள், 70,000 பவுண்டுகள் இருந்தன. லொறியின் சாரதியான Marius Raczynski (28) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்ட விரோத பணப்பரிமாற்றம் செய்திருக்கலாம் என்னும் சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.பின்னர், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பேரில், அவருக்கு 20 வார சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Exit mobile version