Site icon Tamil News

சிறுநீரின் நிறம் சொல்லும் நோய்களின் இரகசியம்

மனித உடலை பல வித நோய்கள் ஆட்கொள்கின்றன. ஆனால், பெரும்பாலான நோய்களுக்கான அறிகுறிகளை நம் உடல் பல விதங்களில் நமக்கு காட்டுகின்றது. இவற்றை பற்றிய புரிதல் இருக்க வேண்டியது மிக அவசியமாகும். இந்த அறிகுறிகளைக் கண்டால், உடனே மருத்துவரை அணுகி, தேவையான பரிசோதனைகளை செய்து, நோய்கள் கண்டறியப்பட்டால், உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

சிறுநீர் பரிசோதனை

பொதுவாக ஒருவர் நோய்வாய்ப்பட்டால், மருத்துவர் அவரிடம் முதலில் சிறுநீர் பரிசோதனையை (Urine Test) செய்துகொள்ளுமாறு கூறுகிறார். ஏனென்றால், சிறுநீரின் நிறத்தை வைத்தே உங்களுக்கு என்ன நோய் இருக்கிறது என்பதைக் கண்டறியலாம். சிறுநீர் நமது ஆரோக்கியத்தைப் பற்றி அதிக விவரங்களை கூறுகிறது. பொதுவாக சிறுநீரின் நிறம் வெளிர் மஞ்சள் நிறத்துடன் டிரான்ஸ்பெரண்டாக இருக்கும். இந்த நிறம் மற்றும் தன்மையில் மாற்றம் ஏற்பட்டால், நாம் அதை உடனடியாக கவனித்து மருத்துவரை அணுக வேண்டும். சிறுநீரின் எந்த வகையான நிறம் எந்த நோயைக் குறிக்கிறது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

ஒரு அரோக்கியமான நபரின் சிறுநீரின் நிறம் (Urine Colour) வெளிர் மஞ்சளாக இருக்கும். மேலும் அது டிரான்ஸ்பரண்ட்டாக இருக்கும். சிறுநீரின் நிறம் மாறுவது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் விளைவுகளை குறிக்கிறது. சிறுநீரின் நிறம் எவ்வளவு அடர் நிறமாக, அதாவது டார்க்காக இருக்கிறதோ, உடலுக்கு நோய் ஏற்படும் அபாயம் அவ்வளவு அதிகம். இது தவிர, சிறுநீரின் நிறம் மிகவும் டிரான்ஸ்பெரெண்டாக இருந்தால், அதுவும் ஒரு நல்ல அறிகுறி அல்ல.

அடர் மஞ்சள்

ஒருவரது சிறுநீரின் நிறம் அடர் மஞ்சள் நிறமாக இருந்தால், அது நீரிழப்புக்கான அறிகுறியாக இருக்கலாம். இது தவிர, இது கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளும் இருக்கக்கூடும். சில நேரங்களில் இது நாம் உட்கொள்ளும் மருந்துகளின் பக்க விளைவுகளாலும் நிகழ்கிறது.

மேலும் படிக்க | பால் பிடிக்காதா? பரவாயில்லை… கால்சியம் கிடைக்க இந்த உணவுகளையும் சாப்பிடலாம்

சிவப்பு

சிறுநீரின் நிறம் சிவப்பாக இருந்தால், அதை நாம் எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்ளலாம். இது சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். இது தவிர, சிறுநீரின் நிறம் சிவப்பு நிறமாக இருந்து, சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படவில்லை என்றால், அது புற்றுநோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். இப்படி இருந்தால், உடனடியாக மருத்துவரை சென்று பார்ப்பது நல்லது.

டிரான்ஸ்பெரண்ட்

உங்கள் சிறுநீரின் (Urine) நிறம் டிரான்ஸ்பெரண்டாக இருந்தால், அது உடலில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதற்கான அறிகுறியாகும். தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது. ஆனால் அதிகமாக தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு நல்லதல்ல. அதிக தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகத்தில் அழுத்தம் ஏற்பட்டு, சிறுநீரகம் வேலை செய்வதை நிறுத்திவிடும். ஆகையால் சரியான அளவில் மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆரஞ்சு நிறம்

சிறுநீரின் நிறம் ஆரஞ்சு நிறமாக இருந்தால், உடலில் வைட்டமின் சி மற்றும் கரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன என்று அர்த்தம். இது தவிர, இந்த அறிகுறிகள் தென்பட்டால், கடுமையான கல்லீரல் தொடர்பான நோய்களால் பாதிக்கப்படலாம். ஆகையால், இப்படிப்படட் அறிகுறிகள் தென்படும்போது, கண்டிப்பாக ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

Exit mobile version