Site icon Tamil News

கிளியோபட்ராவின் அழகின் ரகசியம் – கற்றாழை மாத்திரம் போதும்

நம் முக அழகை மேம்படுத்த கற்றாழையை எவ்வாறு பயன் படுத்தலாம் என்பதை பற்றி இங்கே காணலாம்.

கற்றாழை :
நம் தோல் அமிலத்தன்மை கொண்டது இதன் பிஹெச் மதிப்பு 4.5 – 5.5 ஆகும். கற்றாழைக்கும் இதே அமிலத்தன்மை வாய்ந்தது தான், அதனால் தான் நம் தோலுடன் ஒத்து செயல்படுகிறது.

கற்றாழையை வெளிப்புறத்தில் பயன்படுத்துவது போல் உள்புறத்திலும் பயன்படுத்துவதால் உடல் சூட்டை குறைக்கும். சிறுநீர் கடுப்பு ,சிறுநீர் எரிச்சல் போன்றவற்றை சரி செய்யும் .

கற்றாழை அழகு குறிப்புகள்:
அழகுக்கு உதாரணமாக நாம் அனைவரும் கூறுவது கிளியோபட்ரா தான். எகிப்து அரசி கிளியோபட்ரா தன்னுடைய அழகை பராமரிப்பதில் மிக ஆர்வம் கொண்டவர்.

இவர் கழுதை பாலில் தான் குளிப்பாராம்.மேலும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன் கற்றாழை செல்லை முகத்தில் தடவிக் கொள்வாராம். அவரின் அழகுக்கு கற்றாழை ஜெல் முக்கிய காரணம் என்று பல குறிப்புகளில் கூறப்படுகிறது .

கற்றாழை சூரிய ஒளியால் ஏற்பட்ட கருமையை போக்கி சருமத்தை
எப்போதும் ஈரப்பதமாக வைத்துக்கொள்ளும்.

கற்றாழை ஜெல்லை பயன்படுத்துவதற்கு முன் அதை ஏழு முறை தண்ணீரில் கழுவி பிறகுதான் பயன்படுத்த வேண்டும் .இல்லை என்றால் தோலில் அரிப்பை ஏற்படுத்தும்.

கற்றாழை ஜெல்லை பாதாம் எண்ணெயுடன் கலந்து முகத்தில் தடவி வர முகம் பளபளப்பாக காணப்படும்.

லேப்டாப் ,கணினி ,செல்போன் போன்றவற்றால் ஏற்படும் கதிர்வீச்சுகள் மற்றும் வெப்பத்தால் நம் முகம் கருத்துப் போய்விடும்.

இந்த கருமையை போக்க, கற்றாழை ஜெல் ஒரு ஸ்பூன், தேன் ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் 1/2 ஸ்பூன் சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவி வர முகத்தின் கருமை நீங்கி நீங்கிவிடும். மேலும் முகம் பார்ப்பதற்கு மென்மையாகவும், கிளியராகவும் இருக்கும்.

கற்றாழையும் முடி ஆரோக்கியமும்:
முடி உதிர்வை குறைக்க கற்றாழையை எடுத்து வந்து கழுவி ,அதில் உள்ள முள் களை நீக்கி இரண்டாகப் பிளந்து, அதில் சிறிதளவு வெந்தயத்தை வைத்து மூடி விடவும்.

இந்த வெந்தயம் இரண்டு நாட்களுக்குள் முளை கட்டி வரும், அப்போது அந்த முளைகட்டிய வெந்தயத்தை மட்டும் எடுத்து தேங்காய் எண்ணெயில் போட்டு பிறகு அந்த எண்ணையை தினமும் தேய்த்து வர, உடல் சூடு குறைந்து முடி உதிர்வது படிப்படியாக குறையும். சைனஸ் தொந்தரவு இருப்பவர்கள் இந்த எண்ணெயை தேய்க்க வேண்டாம்.

முடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளர கற்றாழை ஜெல், செம்பருத்தி இலை, பூ ,கரிசலாங்கண்ணி இலை, கருவேப்பிலை ஆகியவற்றை அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளித்து வந்தால் முடி நன்கு அடர்த்தியாக வளரும். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்தாலே போதும்.

ஆகவே கற்றாழையின் பலன்கள் நம் உள்புறத்திற்கும், வெளிப்புறத்திற்கும் மிக ஆரோக்கிய நன்மை வாய்ந்தது.

Exit mobile version