Site icon Tamil News

பிரித்தானியாவில் பொதுத் தேர்தலால் தடைப்படும் ருவாண்டா திட்டம்!

பிரித்தானியாவில் பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கு முன்னர் புகலிடக் கோரிக்கையாளர்களை தாங்கிய விமானம் ருவாண்டாவிற்கு செல்லாது என பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

ஜூலையில் முதல் விமானங்கள் செல்லும் என்று அவர் முன்னதாக கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது நடைமுறை சாத்தியத்தை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதன்படி ஜுலை 05 ஆம் திகதி நடைபெறும் பொதுத் தேர்தலில் தான் வெற்றிபெற்றால் ருவாண்டா திட்டம் முன்னெடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சர் கெய்ர் ஸ்டார்மர், ருவாண்டாவிற்கு நாடு கடத்தும் விமானங்கள் தொழிற்கட்சி அரசாங்கத்தின் கீழ் புறப்படாது எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் தொழிற்கட்சி வெற்றியீட்டியது. இது பொதுத் தேர்தலில் தொழிற்கட்சி மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தொழிற்கட்சிக்கு சாதகமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version