Site icon Tamil News

டொனால்ட் ட்ரம்பால் ஐரோப்பிய நாடுகளுக்கு எழுந்துள்ள சிக்கல் : குழப்பத்தில் தலைவர்கள்!

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பதவியேற்றால், அமெரிக்கா நம்பகமான கூட்டாளியாக இருக்குமா என்ற கவலை  ஐரோப்பிய நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.

இதற்கிடையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட U.K பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மர், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, இங்கிலாந்து மற்றும் அதன் ஐரோப்பிய ஒன்றிய அண்டை நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மீட்டெடுக்க முற்படுகையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இடம்பெயர்வு, எரிசக்தி பாதுகாப்பு மற்றும் ரஷ்யாவின் அச்சுறுத்தல் பற்றி விவாதிக்க சுமார் 45 நாடுகளின் தலைவர்கள் ஒன்றுக்கூடுகின்றனர்.

இதன்போது ரஷ்யாவின் படையெடுப்பை எதிர்த்து உக்ரைனுக்கு உதவுவதன் மூலமும், ஆட்கடத்தல் கும்பல்களை ஒடுக்குவதற்கும் உக்ரைனுக்கு உதவுவதன் மூலம் அதிக ஒருங்கிணைப்பு பங்கை பிரித்தானியா எடுப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீப காலத்தின் சவால்கள் எதிர்கால உறவுகளை வரையறுக்க அனுமதிக்க முடியாது” என்று ஸ்டார்மர் கூறியுள்ளார்.

Starmer இன் மைய-இடது அரசாங்கம் பிரெக்சிட் விவாகரத்து விதிமுறைகள் தொடர்பில் ஒரு இணக்கமான சூழ்நிலைய கட்டியெழுப்ப முற்படுகையில் அமெரிக்காவின் அரசியல் மாற்றம் புலம்பெயர் குடியேறிகளை கட்டுப்படுத்த முன்னெடுக்கப்படும் திட்டங்கள், ரஷ்ய – உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவு வழங்குவதில்  தாக்கத்தை செலுத்தலாம் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.

Exit mobile version