Site icon Tamil News

ஜெர்மனியில் உக்ரைன் நாட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை

ஜெர்மனியில் உக்ரைன் நாட்டவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளி விபரம் ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதலை மேற்கொண்ட நிலையில் பலட்சக்கணக்கான உக்ரைன் நாட்டவர்கள் ஜெர்மன் நாட்டுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

இந்த உக்ரைனியர்கள் அகதிகளாக ஜெர்மனியில் வாழ்ந்து வருகின்றார்கள். இந்நிலையில் இவ்வாறு குடிபெயர்ந்த உக்ரைன் நாட்டு அகதிகள் மீது தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.

கடந்த 2 வருடங்களில் உக்ரைன் நாட்டவர்கள் மீது 2600 தாக்குதல் சம்பவங்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் சம்பவங்களை தவிர உடல் ரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்திய சம்பவங்களாக 166 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு மட்டும் இவ்வாறு 1300 தாக்குதல் சம்பவங்கள் இந்த உக்ரைன் நாட்டு அகதிகள் மீது ஜெர்மன் நாட்டினர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த தாக்குதல்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version