Site icon Tamil News

ஆப்கானிஸ்தானின் மலைப் பகுதியில் விபத்திற்குள்ளான விமானம்!

வடகிழக்கு ஆப்கானிஸ்தானின் மலைப் பகுதியில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்துக்குள்ளான விமானத்தில் 6 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமானம் விபத்துக்குள்ளான இடம் இன்னும் துல்லியமாக வெளியிடப்படவில்லை மற்றும் அருகிலுள்ள பகுதிகளுக்கு நிவாரண சேவை குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

இந்தியாவில் இருந்து மாஸ்கோ நோக்கி வந்து கொண்டிருந்த இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதாக ரஷ்யா அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, விபத்துக்குள்ளான விமானம் இந்தியாவிற்கு சொந்தமானது என முன்னர் செய்திகள் வெளியாகியிருந்த போதிலும், அந்த செய்திகளை இந்திய அரசாங்கம் மறுத்திருந்தது.

Exit mobile version