Site icon Tamil News

மலையகத்தில் தீப்பிடித்து எரிவதை பார்த்தவர் மயங்கிவிழுந்து மரணம்!!

பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சீன் தோட்ட மேற் பிரிவில் அதிர்ச்சிக்கு உள்ளாகி தரையில் விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தான் வசிக்கும் இலக்கம் நான்கு தொடர் குடியிருப்பு வீட்டு பகுதியில் உள்ள மின் கம்பத்தில் திடீரென மின் இணைப்பு வயர்கள் தீப்பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நபர் திடீரென தரையில் வீழ்ந்து உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (17) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் சுப்பையா சண்முகம் (58) என்பவர் உயிரிழ்ழுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

சீன் மேல் பிரிவு தோட்டத்தில் மின் இணைப்பு வயர்கள் அடிக்கடி தீப்பிடிப்பதாக தெரிவிக்கும் தோட்ட மக்கள் இத் தோட்டத்தில் தொடர் குடியிருப்புகள் அருகில் காணப்படும் மின் கம்பங்களில் மின் கசிவுகள் மற்றும் இணைப்பு வயர்கள் தொடர்பில் இலங்கை மின்சார சபை பிராந்திய தொழிநுட்ப அதிகாரிகள் பார்வையிட்டு சீர்த்திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version