Site icon Tamil News

கண்கவர் ஒளி நிகழ்ச்சி மற்றும் நடன விருந்துடன் முடிவடைந்த பாராலிம்பிக்ஸ்

பாரா ஒலிம்பிக் போட்டி கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் முடிவடைந்தது.

17வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 28ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் 170 நாடுகளைச் சேர்ந்த 4,463 வீரர், வீராங்கனைகள் 22 வகையான விளையாட்டுகளில் பங்கேற்று தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.

கடைசி நாள் இரவில் பாரீசில் உள்ள ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் கண்கவர் கலை நிகழ்ச்சி, நடனம், சாகசங்களுடன் நிறைவு விழா பிரமாண்டமாக நடைபெற்றது.

பின்னர் தீபம் அணைக்கப்பட்டு, ஒலிம்பிக் கொடி 2028ம் ஆண்டு பாரா ஒலிம்பிக்கை நடத்தும் லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் கமிட்டியிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் விழா நிறைவடைந்தது.

பாரா ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் 2004ம் ஆண்டில் இருந்து முதலிடத்தை பிடித்து வரும் சீனாவை இந்த தடவையும் அரியணையில் இருந்து யாராலும் நகர்த்த முடியவில்லை.

94 தங்கம், 76 வெள்ளி, 50 வெண்கலம் என்று மொத்தம் 220 பதக்கங்களுடன் கம்பீரமாக முதலிடத்தை ஆக்கிரமித்தது.

இங்கிலாந்து 124 பதக்கங்களுடன் 2வது இடத்தையும், அமெரிக்கா 105 பதக்கங்களுடன் 3வது இடத்தையும் பெற்றன. போட்டியை நடத்திய பிரான்சுக்கு 75 பதக்கத்துடன் 8வது இடம் கிடைத்தது.

மொத்தம் 85 நாடுகள் பதக்கப்பட்டியலில் இணைந்தன. ஒரே ஒரு வெண்கலம் வென்ற பாகிஸ்தான் 79வது இடத்தை 6 நாடுகளுடன் பகிர்ந்துள்ளது.

அகதிகள் அணியினர் தங்களது பதக்க எணக்கை இந்த ஒலிம்பிக்கில் தொடங்கினர். அவர்கள் இரண்டு வெண்கலம் கைப்பற்றினர்.

Exit mobile version