Site icon Tamil News

இத்தாலியில் சாய்ந்து விழும் அபாயத்தில் உள்ள பழமையான கோபுரம்!

இத்தாலியின் புகழ்பெற்ற சாய்ந்த கோபுரமான கரிசெண்டா கோபுரம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளாக நீடித்து நிலைத்து நிற்கும் குறித்த கோபுரமானது அதிகமான பார்வையாளர்களையும் கொண்டுள்ளது.

சுற்றுலா பயணிகளை கவரும் முக்கிய இடங்களில் இதுவும் ஒன்று. குறிப்பாக அதன் சரிவு தன்மைக்காகவே உலக புகழ்பெற்ற அதிசயங்களில் ஒன்றாக இடம்பிடித்துள்ளது.

இந்நிலையில் அதன் சரிவு காரணமாகவே அது இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து குறித்த கோபுரத்தை சுற்றி பாதுகாப்பு உலோக வளையத்தை அமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அக்டோபர் 2023 இல், பண்டைய கோபுரங்களின் இயக்கங்களை அளவிடும் சென்சார் அளவீடுகள், அலாரங்களைத் தூண்டின. இதனால், கோபுரத்தை சுற்றியுள்ள பகுதிகளை அவசரமாக மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதற்கிடையில், கோபுரத்தைச் சுற்றியுள்ள கண்காணிப்பு உபகரணங்கள் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் வாசிப்புகளை வழங்குகின்றன. இது சமீபத்திய நிலைமை குறித்து அதிகாரிகளுக்கு தொடர்ந்து தெரியப்படுத்த உதவுகிறது.

Exit mobile version