Tamil News

மீண்டும் ஆரம்பமானது GOAT படத்தின் ஷெட்யூல்… விஜய் போட்ட கண்டிஷன் என்ன தெரியுமா?

நடிகர் விஜய், பிரபுதேவா, பிரஷாந்த், அஜ்மல், மோகன், லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் The greatest of all time படத்தின் சூட்டிங் அடுத்தடுத்து சிறப்பாக நடந்து வருகிறது.

சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் நடந்துவரும் நிலையில் தற்போது சென்னையில் சில தினங்கள் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. இந்த சூட்டிங்கை தொடர்ந்து படக்குழுவினர் ராஜஸ்தான், துருக்கி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்த கட்டங்களில் சூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளனர். படத்தின் சூட்டிங்கை ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

இன்றைய தினம் GOAT படத்தின் சூட்டிங் சென்னையில் துவங்கியுள்ளது. தற்போது படத்தில் விஜய், பிரபுதேவா, பிரஷாந்த் ஆகியோர் இணைந்துள்ள பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

தொடர்ந்து ராஜஸ்தான், இஸ்தான்புல் ஆகிய இடங்களில் படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளன. இந்நிலையில் படத்தின் சூட்டிங்கை ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு செய்ய நடிகர் விஜய் கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குள் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்ய அவர் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதற்கேற்ப படத்தின் சூட்டிங்கை விரைவுப்படுத்த இயக்குநர் வெங்கட் பிரபு திட்டமிட்டு அதற்கேற்ப அடுத்தடுத்த சூட்டிங்கை எடுத்து வருவதாக கூறப்பட்டுள்ளது

Exit mobile version