Site icon Tamil News

‘உலகில் அடுத்து நிகழப்போகும் பேரிடரை நிச்சயம் தவிர்க்கமுடியாது’ – எச்சரிக்கை விடுத்துள்ள பிரிட்டன் விஞ்ஞானி

உலகில் அடுத்து நிகழப்போகும் பேரிடர் நிச்சயம் தவிர்க்கமுடியாததாக இருக்கும் என பிரிட்டன் நாட்டின முன்னாள் அறிவியல் ஆலோசகர் சர் பாட்ரிக் வல்லான்ஸ் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய வல்லான் விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் பேரிடரை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.

நிகழப்போகும் பேரிடரை முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து, பெரிய அளவில் பேரிடராக மாறாமல் தடுக்க வேண்டியது அவசியம் என அவர் அழுத்தம் கொடுத்துள்ளார்.

உடனடியாக நோய் பரவுதலை கண்டறிதல்,தடுப்பூசி,சிகிச்சை மற்றும் கொரோனா பரவுதலின் போது கையாளப்பட்ட அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் அதே தீவிரத்துடன் கையாள வேண்டும், சர்வதேச அளவில் முழு ஒத்துழைப்புடன் இப்பணி நடைபெற வேண்டும் எனவும் சுட்டி காட்டினார்.

அதாவது நமது நாட்டுக்கு ஒரு ராணுவம் தேவை என்பதை நாம் அறிந்திருக்கிறோம் ஆனால் இந்த ஆண்டு நமது நாட்டில் போர் வரப்போகிறத என்பதற்காக அல்ல.. அதுபோலவே நமது நாட்டுக்கு என்ன தேவை என்பதை நாம் அறிந்திருக்க வேண்டும் .இதவரை பேரிடருக்கான அறிகுறியே தென்படவில்லை ஆனால் இந்த நிலையில் தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்திவிடலாம் என்று சொல்வது சரியானதாக இருக்காது இன்னமும் அந்த பேரிடரின் அறிகுறி கூட தொடங்கவில்லை என்று எச்சரிக்கையில் தெரிவதித்துள்ளார்.

பல நாடுகள் ஒன்றினைந்து கொரோனா போன்றதொரு பேரிடரை எதிர்கொள்ள தயாராக வேண்டும் அதுதான் இந்த சூழ்நிலையில் மிகவும் தேவையானதாக இருக்கும் ஆனால் தற்போது போதிய கவனம் இருப்பதாக நான் நம்பவில்லை ஆனால், இந்த கொள்கைகள் G7 மற்றும் G20 நாடுகளின் தீர்மானத்திருந்து அகற்றப்பட்டால் நாம் கொரோனா போன்றதொரு மோசமான சூழ்நிலையைதான் எதிர்கள்ள நேரிடும் என்கிறார்கள்.

நாம் இருக்கும் பிரச்சனையை ஆராயந்து அதற்கான தீரவுகளை விரைவாக தளட வேண்டும் தற்போது தேர்தல் காலம் என்பதால் வரவிருக்கும் அரசு,சுகாதார துறை தொடர்பான பல தீர்மானங்கள் உடனடியாக இயற்றப்பட வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தியிருக்கிறார் .

Exit mobile version