Site icon Tamil News

நடுவானில் ஆட்டம் கண்ட நியூஸிலாந்து விமானம்! இருவருக்கு நேர்ந்த கதி

நியூஸிலாந்து தலைநகர் வெலிங்ட்டனில் இருந்து குவின்ஸ்டவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த Air New Zealand விமானம் திடீரென ஆட்டம் கண்டதில் இருவர் காயமுற்றனர்.

அவர்களில் ஒருவர் பயணி மற்றொருவர் விமானி என்று நியூஸிலாந்து ஊடகம் Crux கூறியது.

சம்பவம் ஜூன் 16ஆம் திகதி பிற்பகல் மணி 2.50க்கு நடந்தது.

சம்பவத்தின்போது பெண் பயணி ஒருவரின் கையில் சூடான காப்பி கொட்டியது. சிப்பந்தி விமானத்தின் கூரையில் மோதிக் காயமடைந்தார். அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

சம்பவம் குறித்துப் பேசிய விமான நிறுவனத்தின் தலைமை நடவடிக்கை, பாதுகாப்பு அதிகாரி டேவிட் மோர்கன் பயணிகளின் பாதுகாப்புக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு நடைமுறைகள் அடிக்கடி மறுஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version