Site icon Tamil News

சிங்கப்பூரில் விமான நிலையத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய நபர்

சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தில் விமானம் ஏறுவதற்கான அனுமதி அட்டையைப் பெற்றுவிட்டு விமானம் ஏறாதவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

55 வயதான குறித்த நபருக்கு வெளிநாடு செல்லத் திட்டமில்லை என்று சந்தேகிக்கப்படுகிறது.

அவர் காதலியை வழியனுப்புவதற்காக அனுமதி அட்டையைக் கொண்டு இடைவழிப் பகுதிக்குள் நுழைந்திருக்கலாம் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

அதிகாரிகளின் விசாரணை தொடர்கிறது. உள்ளமைப்புப் பாதுகாப்புச் சட்டத்திற்கமைய, விமானத்தை ஏறுவதற்கான அனுமதி அட்டையைக் கொண்டு பாதுகாக்கப்பட்ட இடங்களுக்குள் நுழைவது குற்றமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் இடைவழிப் பகுதி பாதுகாக்கப்பட்ட இடங்களில் ஒன்றாகும். விமானத்தை ஏறுவதற்கான அனுமதி அட்டையைத் தவறாகப் பயன்படுத்திய சந்தேகத்தின்பேரின் இவ்வாண்டின் முதல் 8 மாதங்களில் 16 பேர் கைதானதாகக் கூறப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20,000 வெள்ளி வரை அபராதம் அல்லது 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

Exit mobile version