Site icon Tamil News

இஸ்ரேலின் மொசாட் பிரிவை சேர்ந்த உளவாளியை தூக்கிலிட்டது ஈரான் அரசு!

இஸ்ரேலின் மொசாட் பிரிவைச் சேர்ந்த உளவாளி ஒருவரை ஈரான் தூக்கிலிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானின் அறிக்கையில் கைது செய்யப்பட்ட உளவாளி வெளிநாட்டு புலனாய்வு அமைப்புகளோடு தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

ஈரானின் ரகசிய தகவல்களை வெளியிடும் குற்றத்தில் அந்த உளவாளி தொடர்புடையவராகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அந்த உளவாளி சஹீதானில் உள்ள சிறையில் தூக்கிலிடப்பட்டுள்ளார். உளவாளியின் விவரங்கள் எதுவும் அறிக்கையில் பகிரப்படவில்லை.

கடந்த 2022 ஏப்ரலில், இஸ்ரேலின் உளவாளி அமைப்பான மொசாட்டுடன் தொடர்புடைய 3 பேரை கைது செய்ததாக ஈரான் தெரிவித்தது. தற்போது தூக்கிலிடப்பட்ட நபர் அவர்களில் ஒருவரா என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

உளவாளிகளைப் பயன்படுத்தி போருக்கு வழி செய்வதாக ஈரானும் இஸ்ரேலும் ஒருவரையொருவர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. தனது மிகப்பெரும் எதிரியாக ஈரானைப் பார்க்கும் இஸ்ரேல், ஈரானின் அணு ஆயுதங்கள் இருப்பைத் தடுப்பதற்காக, அதன் மீது ராணுவ நடவடிக்கைகள் எடுப்பதாக பலமுறை எச்சரித்துள்ளது.

அணு ஆயுதங்கள் இருப்பை உறுதி செய்யாத ஈரான் அந்தக் குற்றச்சாட்டை எதிர்த்ததோடு, இஸ்ரேலின் ராணுவம் அத்துமீறினால் உரிய முறையில் பதிலளிக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இஸ்ரேலை ஆதரிக்காத ஈரான், ஹெஸ்புல்லா மற்றும் ஹமாஸ் போன்ற இஸ்லாமிய ஆயுதப் போராளிகளுக்குத் தன் ஆதரவை அளித்துவருவது குறிப்பிடத்தக்கது

Exit mobile version