Tamil News

‘Leo” Box Office: மாஸ் காட்டிய தளபதி

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடித்திருந்த ‘லியோ’ திரைப்படம் முதல் நாளே பாக்ஸ் ஆபிஸில் சில முன்னணி நடிகர்களின் லைப் டைம் வசூலை பதம் பார்த்த நிலையில், தற்போது ‘லியோ’ படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது

முதல் நாளில் ரூ.148 கோடி ‘லியோ’ திரைப்படம் வசூல் செய்ததாக, படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்தது.

ஆனால் இரண்டாவது நாளில் ‘லியோ’ படத்தின் வசூல் 44% வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இதற்கு இப்படம் குறித்து, சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்திகள் தான் காரணம் என ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள் தளபதியின் ரசிகர்கள்.

எனினும் இரண்டாவது நாளில் ‘லியோ’ 100 கோடியை கடந்துள்ளது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆறுதல் எனலாம். இந்தியாவில் மட்டும் இரண்டாவது நாளில் லியோ படம் ரூ.42.50 கோடி மட்டுமே வசூலித்துள்ளதாகவும், குறிப்பாக தமிழகத்தில் ரூ.24 கோடியும், ஆந்திரா-தெலுங்கானா மற்றும் கேரளாவில் தலா ரூ.6 கோடியும் வசூலித்துள்ளதாம். கர்நாடகாவில் ரூ.4.50 கோடி வசூலித்துள்ளதாகவும், கூறப்படுகிறது.

சனி – ஞாயிறு விடுமுறை நாள் என்பதால், இரண்டாம் நாளைவிட வசூல் கூடும் என திரையரங்கு உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

எப்படியும் ஒரே வாரத்தில் தளபதியின் ‘லியோ’ திரைப்படம் 500 கோடியை எட்டுமா? என்பேதே ரசிகர்ளின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

Exit mobile version