Site icon Tamil News

மலையகத்துக்கான ரயில் போக்குவரத்து பாதிப்பு!

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் ரயில் ஒன்று கெயினிகம மற்றும் ஹெய்லோயாவிற்கு இடையில் தடம் புரண்டுள்ளது.

இன்று (30.10) முற்பகல் 11.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக மலையகப் பாதையில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

Exit mobile version