Site icon Tamil News

ஜெர்மனியில் வெளிநாட்டவர்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பு

ஜெர்மனியில் வெளிநாட்டவர்களால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து பாரிய ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

ஜெர்மனியில் பாடன்பேர்க் மாநிலத்தில் நடைபெற்ற குற்ற செயல்கள் தொடர்பான புள்ளி விபரம் ஒன்று தற்பொழுது வெளியாகியுள்ளது.

பாடன்பேர்க் மாநிலத்தின் உள் ஊர் ஆட்சி அமைச்சர் எவ்வளவு குற்றச் சம்பவங்கள் 2023 ஆம் ஆண்டு நடைபெற்றது என்பது பற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்தில் மொத்தமாக 595000 குற்றவியல் சம்பவங்கள் நடைபெற்றதாகவும்,

இந்த குற்றவியல் சம்பவம் 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது 3 இல் 2 பகுதி அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குற்றவியல் சம்பவங்களில் ஈடுப்பட்டவர்களில் 50 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் வெளிநாட்டவர்கள் என்றும் அவர் கூறி இருக்கின்றார்.

ஜெர்மன் நாட்டின் கடவுச்சீட்டு இல்லாத வெளிநாட்டவர் என்றும், அகதிகளாக வந்தவர்களுடைய குற்றவியல் சம்பங்களும் பாரிய அளவில் உயர்ந்துள்ளதாகவும், அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு மொத்தமாக 78600 குற்றவியல் சம்பவங்கள் அகதிகளால் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக அகதிகள் இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட குற்றவியல் சம்பவங்கள் அகதி சட்டத்துக்கு எதிரான சம்பவங்கள் என்றும் அவர் சுட்டிகாட்டியுள்ளார்.

மேலும் 14 தொடக்கம் 20 வயதுக்கு உட்பட்டவர்களும் குற்றவியல் சம்பவங்களில் ஈடுப்பட்டுள்ளதாகவும், 21 வயதுக்கு உட்பட்டவர்கள் மேற்கொள்ளப்பட்ட குற்றவியல் சம்பவங்கள் 52700 ஆக பதிவு செய்யப்பட்டதாகவும், 6000 தாக்குதல் சம்பவங்கள் பொலிஸாருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதாகவும்,

இதில் 3000 சம்பவங்களில் பொலிஸாருக்கு காயங்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version