Site icon Tamil News

ஜெர்மனியில் வெளிநாட்டவர்களால் ஏற்பட்டுள்ள பாதிப்பு – பாடசாலையில் விபரீதம்

ஜெர்மனியில் வெளிநாட்டவர்களின் வன்முறை சம்பவங்கள் மற்றும் கத்தி குத்து சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் மற்றும் சிரியா நாட்டவர்கள் கூடுதலான வன்முறை சம்பவங்ளை மேற்கொண்டு வருவதாக புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது.

ஹம்போர்க்கில் 20 வயதுடைய 2 இளைஞர்கள் போட்குசுலல் என்று சொல்லப்படும் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் மீது பாடசாலை வாசலில் வைத்து கத்தி குத்து சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட ஆசிரியர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் கிறைம்வோட் நகரத்தில் உள்ள வீடு ஒன்றில் கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

20 வயதுடைய இளைஞர் 16 வயதுடைய குற்றவாளி ஒருவரால் கத்து குத்துக்கு இலக்காகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் பொலிஸார் குறித்த 16 வயதுடைய இளைஞரை கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இவ்விரு சம்பவங்கள் தொடர்பில் பொலிஸதர் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version